பாடசாலையில் வன்முறை -மாணவர்கள் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
பாடசாலையில் இடம்பெற்ற சமய சடங்கின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் அந்த பாடசாலையின் 07 மாணவர்கள் கெக்கிராவ காவல் நிலையத்தினால் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவ புறநகர் பகுதியிலுள்ள பிரபல தேசிய பாடசாலையொன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வின் போது, அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்று இவ்வாறு வன்முறையாக நடந்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரித் மண்டபத்தையும் தாக்கி சேதப்படுத்தி
வன்முறையில் ஈடுபட்ட அந்த மாணவர்கள் பிரித் மண்டபத்தையும் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி