படையெடுக்கும் வேவ் கப்பல்கள் : சீனாவினால் சுற்றிவளைக்கப்படும் இந்தியா
பாகிஸ்தான் இந்தியா பதற்றத்தின் பெருஞ்சத்தத்தில், இந்தியாவை குறிவைத்து சீனா மேற்கொண்டு வருகின்ற சில வியூகங்கள் நிசப்பதமாகவே இருந்துவிடுகின்றன.
போரை முன்வைத்து அங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் பகடை ஆடிக்கொண்டிருக்க, சீனா இந்தியாவை விட தனது நீண்ட கால நலன்களை நோக்கி மிக வேகமாக நகர ஆரம்பித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டது.இந்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான யுத்த முன்னெடுப்புக்கள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்த பொழுது, சீனா தனது வேவு கப்பல் ஒன்றை மெதுவாக இலங்கையின் தென் கடலுக்கு அனுப்பி வைத்திருந்தது.
கடந்த மே மாதம் 10ஆம் திகதி பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. 11ஆம் திகதி சீனா தனது வேவு கப்பல் இந்து சமுத்திரத்திற்கு அனுப்பிவைக்கின்றது.
கொடூரமான ஒரு யுத்த மேகம் இந்தியாவைச் சூழ்ந்து விட்டிருந்த நிலையில், இந்தியாவுக்கு தெற்காக இருக்கின்ற கடற்பரப்பில் சீனா தனது வேவு கப்பலை அனுப்பியிருந்ததானது - இந்திய ஆய்வாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது.
இந்தியாவை குறிவைத்து சீனா தனது வியூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக எவ்வாறு இறுக்க ஆரம்பித்துள்ளது என்பது பற்றியும், கடந்த சில நாட்களாக இந்தியாவைச் சூழ நடைபெற்று வருகின்ற சில அச்சம் தருகின்ற சம்பவங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
