விமானத்தில் வைத்து அறையப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி: வைரலாகும் காணொளி
பிரான்ஸ் (France) ஜனாதிபதி மேக்ரான் (Emmanuel Macron) விமானத்தில் வைத்து அறையப்படுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மனைவியுடன் வருகை தந்த போது, மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரான் அவரை கன்னத்தில் அறைவது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.
வைரலாகும் காணொளி
விமான கதவு திறந்தவுடன், மேக்ரானின் முகத்தில், சிவப்பு நிறை உடை அணிந்த ஒரு கை தள்ளுவது போன்று அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
Macron getting slapped from his wife is on every news media but Israel literally burning alive children is not (this has video evidence as well)pic.twitter.com/bKgmz0WwUI
— Furkan Gözükara (@GozukaraFurkan) May 26, 2025
சிறிது நேரத்தில் சிவப்பு நிற உடையில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான், விமானத்தின் உள்ளே இருந்து வெளியே வருகின்றார்.
இதனால் அவரது மனைவி தான் அவரை அறைந்ததாக இணையத்தில் தகவல் பரவி வருகின்றது.
ரஷ்ய ஆதரவு
முதலில் இந்த காணொளியை நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகிய பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம், பின்னர் காணொளி உண்மையானது என ஒப்புக்கொண்டுள்ளது.
அதேவேளையில், இது அவர்களுக்கு இடையேயான விளையாட்டான சண்டை என விளக்கமளித்துள்ளனர்.
இந்த காணொளி பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக ரஷ்ய ஆதரவு பெற்ற சமூகவலைத்தள கணக்குகளால் அதிகம் பகிரப்படுவதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
