ரஷ்ய தொடருந்து மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் (Ukraine) போர் முனையில் எரிபொருளுடன் சென்ற ரஷ்ய (Russia) தொடருந்து மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தொடருந்தை ட்ரோன்களால் தாக்கி உக்ரைன் படைகள் நெருப்பு கோளமாக மாற்றியுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு சம்பவத்துடன் தொடர்புடைய காணொளியை பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று கிடங்குகள்
ரஷ்யர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா வழியாகச் செல்லும் போது எரிபொருள் நிரப்பப்பட்ட தொடருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
ட்ரோன்களால் துல்லிய தாக்குதலுக்கு இலக்கான தொடருந்தில் மூன்று கிடங்குகள் நெருப்பு கோளமாக வெடித்துள்ளது.
அதிரடித் தாக்குதல்
உக்ரைன் ட்ரோன்கள் அதிரடித் தாக்குதலை முன்னெடுப்பதற்கு முன்பு அந்த தொடருந்து வெர்க்னி டோக்மாக்-மோலோசான்ஸ்க்-ஃபெடோரிவ்கா தொடருந்து பாதையில் பதுங்கிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனின் elite GUR பிரிவே மே 24 ஆம் திகதி இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இந்த ஆபரேஷனானது சபோரிஜியாவில் விளாடிமிர் புடினின் படைகளுக்கு சப்ளை செய்யும் ஒரு முக்கிய தளவாடத்தை அழித்தது என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
