அவர்கள் மீளவும் வந்தால் தான் விடிவு : கொடிகாமத்தில் துணிந்து சொல்லும் இளைஞன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தற்போது உள்ள அரசாங்கமும் சரி இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமும் உதாசீனப்படுத்துவதாக வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்
அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (NPP) தேர்தல் காலங்களின் போது தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுப்பதாகவும், அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் எந்த ஒரு வாக்குறுதியும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
மேலும் ஈழத்தில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் போன்று வேறு எந்த நாட்டிலும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை எனவும் இது வரையில் அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது உள்ள அரசாங்கம் மீதான மக்களின் மனநிலை எவ்வாறு காணப்படுகிறது என்பதை கீழ் உள்ள காணொளி இணைப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
