நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணை இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தமாக 31 பேர் உயிரிழந்தனர்.
எதிர்க்கட்சி தீர்மானம்
சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்திருந்தது.

இந்தநிலையில் குறித்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அமைச்சு பொறுப்பிலிருந்து ஹர்சன நாணயக்கார விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த பின்னணியில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஜூலை 10 அன்று நாடாளுமன்றத்தில் வைத்து கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்