மோடியை தோற்கடிக்கவேண்டும் : சுப்ரமணிய சுவாமியின் அறிவிப்பால் பா.ஜ க.வினர் கொந்தளிப்பு
நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக வரவே கூடாது என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது அந்தக்கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (மார்ச் 24) மதுரைக்கு வந்த சுப்பிரமணியன் சுவாமி, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர்,"மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவாரா" என்று கேள்வியெழுப்பினார்.
மோடியை தோற்கடித்தே ஆக வேண்டும்
அதற்கு சட்டென, "அவர் வரக்கூடாது. மோடியை தோற்கடித்தே ஆக வேண்டும். தேசிய அளவில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கலாம். பாஜக ஆட்சிக்கு வரலாம். ஆனால் மோடி வரவே கூடாது.
இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி, ஒன்றுமே செய்யவில்லை. இந்தியாவிற்கு சொந்தமான 4000 சதுர கி.மீ. நிலத்தை சீனா எடுத்துச் சென்றுவிட்டது. ஆனால் அதை தடுக்க கூட மோடி நடவடிக்கை எடுக்கவில்லை.
மாலைதீவு போன்ற சிறிய நாடுகள்
நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் இருக்கிறது. அதை மேம்படுத்தவும் அவர் எதையும் செய்யவில்லை. சும்மா விளம்பரத்தில் மட்டும் நாங்கள் அதை செய்துவிட்டோம் இதை செய்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒன்றும் செய்யவில்லை.
மாலைதீவு போன்ற சிறிய நாடுகள் இந்திய வீரர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள். அப்படித்தான் நிலைமை இருக்கிறது" என சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |