மஹிந்தவின் சகா சுப்பிரமணியன் சுவாமி சிறிலங்கா விஜயம்!
india
mahinda
sri Lanka
subramaniyan swami
navarathri pooja
By Kalaimathy
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி(Subramaniyan swamy), சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தார். அவரை, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக(D.V.CHanaka) மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்றுமாலை நடைபெறும் நவராத்திரி விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. அத்துடன், சிறிலங்கா இராணுவத்தின் 72 ஆவது நிறைவையொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கிலும் அவர் உரையாற்றவுள்ளார்.


