பல்துலக்கும்போது நிகழ்ந்த விபரீதம்
tamilnadu
doctors
brush
By Sumithiran
பல் துலக்கும் போது தவறி விழுந்ததில் வாயில் சிக்கிய பற்தூரிகையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி என்பவர் காலைவேளை வழக்கம் போல் பல் துலக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பற் தூரிகை ரேவதியின் ஒரு பக்க கன்னத்தை கிழித்து மறுபுறம் சென்றுள்ளது. இதில் பற் தூரிகை அவரது வாய் பகுதியில் சிக்கி பலத்த காயம் அடைந்தது.
இதை கண்ட அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் நிலைமையைக் கண்ட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பற்தூரிகையை அகற்ற முடிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று ரேவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது வாயிலிருந்து பற்தூரிகையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி