மட்டக்களப்பில் எரிபொருள் நிரப்பச் சென்றவருக்கு நேர்ந்த கதி
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Batticaloa
                
                                                
                    Eastern Province
                
                        
        
            
                
                By Aadhithya
            
            
                
                
            
        
    மட்டக்களப்பில் (Batticaloa) முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (14) இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்றபோதே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
கால்துறையினர் விசாரணை
இந்தநிலையில், உயிரிழந்துள்ளவர் மட்டக்களப்பு, நாவற்குடா பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு கால்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Batticaloa) கொண்டு செல்லப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்