மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார் - அரசுக்கு வலுக்கும் நெருக்கடி
train
trade union action
station-masters
By Sumithiran
பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
நீண்ட காலமாக "ஸ்டேஷன் மாஸ்டர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ரயில்வே திணைக்கள நிர்வாகம் தீர்வு காணத் தவறியதே" இதற்குக் காரணம்.
ரயில் நிலைய அதிபர்களின் பிரச்சினைகள் குறித்து தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரிடம் கலந்துரையாடிய போதும் அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமையினால் செயற்குழு தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்ள்ளவுள்ளதாக நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் மற்றும் புதிய போக்குவரத்து அமைச்சருடன் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் சாமர குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்