திருகோணமலை தேசிய சேமிப்பு வங்கியில் திடீர் தீ பரவல்
Srilanka
Trincomalee
fire spread
National Savings Bank
By MKkamshan
திருகோணமலையில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு தீ ஏற்பட்டது போன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு வங்கிக்கு அருகாமையில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.




