பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
srilanka
covid19
corona
sudarshini fernandopulle
By S P Thas
மக்கள் கூடும் எவ்விதமான கூட்டங்களுக்கு இடமளிப்பதில்லை என சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை அடுத்த மாத காலத்தில் கடுமையான சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாமல் போனால், நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் எனவும் மக்கள் இது குறித்து கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை இரண்டு வார காலம் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளே இதற்கு காரணம் எனவும் சுதர்ஷனி குறிப்பிட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்