சுகீஷ்வர பண்டாரவுக்கு பிணை
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Sindu
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகக் செயலாளராகப் பணியாற்றிய சுகீஷ்வர பண்டார, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (18) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் சுகீஷ்வர பண்டார கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
கடந்த 11ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணையின்போது, இவருக்கான பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் பிணை தொடர்பான பரிசீலனை இன்று 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 5 மாதங்களின் பின்னர் சுகீஷ்வர பண்டார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |