யாழில் தவறான முடிவெடுத்த இளம்பெண் காப்பாற்றப்பட்டார்
people
suicide jaffna
love failure
By Vanan
யாழ் - நாவற்குழி பாலத்திற்குள் பாய்ந்து இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் பொதுமக்களால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் நாவற்குழி பாலத்திலிருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற நிலையில் அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த பெண் யாழ். ஸ்ரான்லி வீதியைச் சேர்ந்தவர் எனவும் காதல் தோல்வியின் காரணமாகவே தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்