அநுரவின் இரகசிய முகவர்களாக சுமந்திரன் - சாணக்கியன் : அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி
சுமந்திரனும் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியனும் (Shanakiyan Rasamanickam) அரசின் இரகசிய முகவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்ணனியிள் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலோடு வடக்கில் தமிழரசுக் கட்சி காணாமல் போகும்.
அவர்களால் நெடுகளும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது, வடக்கு கிழக்கில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு கொழும்பில் சென்று தென்னிலங்கை கட்சிகளுடன் கூடி குழாவுவதும் கண்டியில் அமைச்சர்களின் வீடுகளில் கொஞ்சி குழாவுவதும் மக்களுக்கு தெரியாமல் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுமந்திரன் சாணக்கியன் கூட்டரசியல், தமிழ் மக்களின் அரசியல் களம், தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகும் அரசியல் நெருக்கடி, அநுர ஆட்சி மற்றும் பலதரப்பட்ட அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
