இந்தியாவை அழிக்கத் தயாராகும் இரும்புப்பறவைகள் : வரப்போகும் பேராபத்து
பஹல்காம் (Pahalgam) பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் (India) பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு (Pakistan) போர் உபகரணங்களை கொத்து கொத்தாக துருக்கி அனுப்பி உள்ளது. துருக்கிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ், ராணுவ போக்குவரத்து விமானம் உட்பட பல போர் உபகரணங்கள் நேற்று கராச்சிக்கு அனுப்பப்பட்டது.
துருக்கியின் (Türkiye) இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.
ஆறு துருக்கிய C-130 விமானங்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு விமானங்கள் மட்டுமன்றி தோட்டாக்கள், கவச உடைகள், ஆயுதங்கள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று கொத்து கொத்தாக அனுப்பப்பட்டு உள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக துருக்கி நாட்டு ட்ரோன்களால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. துருக்கி ட்ரோன்களால் இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவே கலங்கி நிற்கும் சூழலில் பிரதமர் மோடி எப்படி சமாளிக்க போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ட்ரோன்கள் நவீன கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதியை கொண்டுள்ளது. அதோடு ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
இந்த போர் ட்ரோனால் எம்ஏஎம் - எல், எம்ஏஎம் - சி உள்ளிட்ட ஏவுகணைகள் உள்பட 4 தாக்குதல் நடத்தும் பொருட்களை சுமந்து செல்ல முடியும்.
லேசர் தொழில்நுட்ப தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. அதோடு 25,000 ஆயிரம் அடி உயரம் பறக்கும் திறன் கொண்டதாக காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவை அழிக்கத் தயாராகும் பாகிஸ்தானின் இரும்புப்பறவைகள் அதாவது ட்ரோன்களிடமிருந்து இந்தியா எவ்வாறு தன்னை பாதுகாத்துக்கொள்ள போகிறது என்பதும் கேள்விக்குறியாக காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
