இந்திய தூதுவரை தனியாக சென்று சந்தித்த சுமந்திரன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்,தனியாளாக சென்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம்(07)இடம்பெற்றுள்ளது.
பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து பரிமாற்றம்
இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், வடக்கு கிழக்கில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் நிலை குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
High Commissioner @santjha met Ilankai Tamil Arasu Katchi (ITAK) General Secretary @masumanthiran. Exchanged views on current political developments in Sri Lanka, as well as India assisted development projects in North & East.@MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/lIvWh2ZUB3
— India in Sri Lanka (@IndiainSL) October 7, 2025
மற்றுமொரு சந்திப்பு
அதேவேளை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
Productive meeting between #TPA and the Indian HC @IndiainSL. Discussions covered the Indian housing scheme in the plantations, ongoing grant and credit line assistance to Sri Lanka, and the anticipated ferry services between KKS–Nagapattinam and Colombo–Tuticorin. #ManoGanesan… pic.twitter.com/EOzhNffzaE
— Mano Ganesan (@ManoGanesan) October 8, 2025
இந்த சந்திப்பில் மலையக பகுதிகளில் இந்திய வீட்டுவசதித் திட்டம், இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் கடன் உதவி மற்றும் காங்கேசன்துறை–நாகப்பட்டினம் மற்றும் கொழும்பு–தூத்துக்குடி இடையே எதிர்பார்க்கப்படும் படகு சேவைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
