யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்
யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) விஜயம் செய்துள்ளார்.
சுமந்திரனின் இன்றைய (21) விஜயத்தின் போது ஆவண காப்பகத்தில் நிறுவப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களையும் பார்வையிட்டார்.
அத்துடன் இதன்போது சுமந்திரன் நினைவுக்குறிப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
பேசப்படவேண்டிய தியாகம்
அந்தக் குறிப்பில், ”திலீபன் நினைவாலயம் தொடர்ந்து தமிழ் மக்களது வரலாற்றில் இன்றியமையாத இடத்தைப் பெற வேண்டும்.
தனது இனத்துக்காக தன்னின்னுயிரை ஆகுதியாக்கிய இந்தத் தியாகம் இந் நாட்டில் தமிழ் மக்கள் வாழும் காலம் முழுவதும் பேசப்படும்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக, திலீபன் தியாக தீபமாக ” எனும் தொனிப்பொருளுடன் இந்த ஆவணக் காட்சியகம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

