யாழ்ப்பாணம் இயல்பு நிலையில்! சுமந்திரனின் கடையடைப்பு தோல்வி
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை எதிர்த்து இன்று (18) கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் கடையடைப்பிற்கு ஆதரவு வழங்காமல் பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலையில் காணப்பட்டதுடன் தமிழரசுக் கட்சியின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் ஒரு சில கடைகள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தன.
அதாவது கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்த 3 மணித்தியாலயத்தில் யாழ்ப்பாணத்தில் பிரதான இடங்களான யாழ் நகரப்பகுதி, பொதுச்சந்தை, மருதனார்மடம், சுன்னாகம், மல்லாகம், திருநெல்வேலி ஆகிய மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் இன்றும் வழமை போன்று இயங்கின.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டமானது தன்னிச்சையாக தீர்மானிக்கப்பட்டதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சமூக அமைப்புக்கள் பலவற்றுடனும் கலந்துரையாடி முடிவெட்டப்படாமையால் சிலர் தமது ஆதரவை மறுத்துள்ளதாகவும் அனைவரும் கலந்தாலோசித்து போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும் எனவும் பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

