அநுரவை வைத்து சுமந்திரன் - சாணக்கியன் ஆடும் அரசியல் சதுரங்கம்...!
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய ஆட்சி மாற்றம், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிற்குள் புதிய வியூகங்களை வகுப்பதைக் காட்டிலும் நீண்டகாலமாக நிலவி வரும் உட்கட்சி முரண்பாடுகளை மீண்டும் ஒருமுறை பகிரங்கப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை அணுகும் முறையில், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரிடையே நிலவும் இந்த மாறுபட்ட போக்குகள், தனிநபர்களின் கொள்கை என்ற எல்லையைத் தாண்டி, தமிழரசுக் கட்சியின் ஒட்டுமொத்த அரசியல் திசைவழியையே கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
ஒருபுறம், ஊடகங்கள் வாயிலாக அநுர அரசாங்கத்தின் குறைபாடுகளை எம்.ஏ.சுமந்திரன் மிகக் கடுமையாக விமர்சித்து வரும் அதேவேளை, மறுபுறம் நாடாளுமன்ற அமர்வுகளில் சாணக்கியன் அரசாங்கத்தின் சில நகர்வுகளுக்கு ஆதரவாகவும் ஆக்கபூர்வமாகவும் கருத்து வெளியிட்டு வருகின்றார்.
ஒரே கட்சிக்குள் இருக்கும் இரு முக்கிய ஆளுமைகளின் இந்த முரணான நிலைப்பாடுகள், தமிழ் மக்களை எதை நோக்கி வழிநடத்தும் என்ற குழப்பத்தையும், கட்சியின் நம்பகத்தன்மை குறித்த பாரிய கேள்விகளையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளன.
இந்தநிலையில், இவர்களுக்கு இடையிலான இந்த மாறுபட்ட தர்க்கங்களின் பின்னணியில் உள்ள அரசியல் இலாபங்கள் என்ன என்பதையும், இது எதிர்காலத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய அரசியலின் செல்வாக்கை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் மற்றும் தற்போதைய அரசியல் களம் குறித்தும் விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |