போராளிகளை பணம் கொடுத்து உடைத்த சுமந்திரன் - அம்பலப்படுத்திய மூத்த போராளி
TNA
SriLanka
M.A.Sumanthiran
By Chanakyan
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) முன்னாள் போராளிகளுக்கு பணம் கொடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைத்து அவர்களை செயலற்றவர்காளக மாற்றுவதற்கு முயன்றிருந்தார்.
அதன் விளைவாகத்தான் விடுதலைப் புலிகளின் அரசியல் இயக்கமாக தம்மை அடையாளப்படுத்திய ஜனநாயகப் போராளி கட்சிகள் அதன் உரிமையை இழந்துள்ளதாக அறிவித்திருந்தேன் என இன்றைய தினம் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியின் பிரத்தியேக செவ்வியின் போது மூத்த போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முழுமையான செவ்வியினை ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்,