வரி ஏய்ப்பு : ஜனகரத்நாயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க(janaka ratnayake) மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு (colombo)மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.
கிருலப்பனை பிரதேசத்தில் இயங்கி வந்த கணனி சேவை வழங்குனர் ஒன்றின் சார்பாக மூன்று மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வற் வரியை அரசாங்கத்திற்கு செலுத்தாத சம்பவத்துடன் தொடர்புடையது.
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை
இந்த சம்பவத்தில் கணவன்-மனைவி தம்பதிகளான ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி குமாரி யசோதா சில்வா ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணையும் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை, அதற்கு பதிலாக நிறுவனத்தின் மற்றொரு இயக்குனர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
வருமான வரி நிலுவை
எனவே, பிரதிவாதி தம்பதியினரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சார்பில் முன்னலையான சட்டத்தரணி தினேஷ் பெரேரா நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2016, 2017, 2018 ஆகிய மூன்று வருடங்களுக்கான வரி பாக்கியாக 31,846,248.24 ரூபாவையும் வருமான வரி நிலுவையாக 1,851,658.37 ரூபாவையும் அரசாங்கத்திற்கு செலுத்தியிருக்க வேண்டும் எனவும், ஆனால் அத்தொகையை அவர்கள் செலுத்தத் தவறியுள்ளதாக சட்டத்தரணி தினேஷ் பெரேரா நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |