டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு: கடும் கண்டனம் வெளியிட்டுள்ள சுந்தர் பிச்சை
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீதான துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர் பிச்சை (Sundar Pichai) கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
இது தொடர்பாக அவர் பதிவில் மேலும் தெரிவிக்கையில் "டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் இன்றைய துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்புகளால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்.
I’m wishing President Trump a speedy recovery. I’m shocked by today’s shooting and loss of life. Political violence is intolerable and we must all come together to strongly oppose it.
— Sundar Pichai (@sundarpichai) July 14, 2024
அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை கடுமையாக எதிர்க்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |