அமெரிக்காவில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: ஜோ பைடன் வெளியிட்ட தகவல்
அமெரிக்க (united states of america) - பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரசாரக் கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த போதே ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அவருக்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
அதிபர் ஜோ பைடன் கவலை
இந்நிலையில்,பென்சில்வேனியாவில் டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தனது எக்ஸ் தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
I have been briefed on the shooting at Donald Trump’s rally in Pennsylvania.
— President Biden (@POTUS) July 13, 2024
I’m grateful to hear that he’s safe and doing well. I’m praying for him and his family and for all those who were at the rally, as we await further information.
Jill and I are grateful to the Secret…
இதேவேளை ட்ரம்ப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறார் என்பதை அறிந்த பின்னர் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும்போது, அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பேரணியில் இருந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக நான் மற்றும் ஜில், இரகசிய சேவைக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. அதைக் கண்டிக்க ஒரே தேசமாக நாம் ஒன்றுபட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர்
இதேவேளை முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீதான வெளிப்படையான தாக்குதலால் நானும் சாராவும் அதிர்ச்சியடைந்தோம்.
Sara and I were shocked by the apparent attack on President Trump. We pray for his safety and speedy recovery.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) July 13, 2024
அவர் பாதுகாப்பாகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Israel Prime Minister Benjamin) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
I fully endorse President Trump and hope for his rapid recovery pic.twitter.com/ZdxkF63EqF
— Elon Musk (@elonmusk) July 13, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |