கனடாவில் மதுபான நிறுவன பணியாளர்களின் போராட்டம்: பல்வேறு நிகழ்வுகள் பாதிப்பு
Ontario
Canada
World
By Laksi
கனடாவில் (Canada) மதுபான விற்பனை நிறுவனங்களில் ஒன்றான LCBO நிறுவனப் பணியாளர்கள் ஒன்றாரியோவில் (Ontario) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தினால் மாகாண மதுபான விற்பனைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபான விற்பனை நிலையங்கள்
இதேவேளை, மதுபான விற்பனை நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மாகாணத்தின் பல்வேறு நிகழ்வுகளை பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருமண நிகழ்வுகள், கோடைகால விருந்துபசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இந்த போராட்டம் தடையாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இணையத்தின் மூலம் சிறிய அளவில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்