சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக NASA அறிவிப்பு
27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக நாசா புதன்கிழமை அதிகாலையில் அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணியில் சேர்ந்தார்.
வெற்றிகரமான பயணங்கள்
அவரது பதவிக் காலத்தில், அவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) மூன்று வெற்றிகரமான பயணங்களை முடித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் மொத்தமாக விண்வெளியில் 608 நாட்கள் கழித்துள்ளார். இது நாசா விண்வெளி வீரர்களில், விண்ணில் இரண்டாவது அதிகபட்ச ஒட்டுமொத்த நேரமாகும்.
மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணத்தில், விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் இணைந்து, 286 நாட்கள் சுற்றுப்பாதையில் இருந்து, அமெரிக்கர்களில் ஆறாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.
நாசாவின் தகவலின்படி, சுனிதா மொத்தம் 62 மணி நேரம் மற்றும் 6 நிமிடங்கள் நீடித்த ஒன்பது விண்வெளி நடைகளை முடித்துள்ளார்.
விண்வெளியில் அதிக நேரம்
இதன் மூலம் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபரும் இவரே ஆவார்.

இந்திய வம்சாவளியைச் சேர்த்த இவர் இந்திய பெண்கள் மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றார்.
60 வயதான சுனிதா வில்லியம்ஸின் இந்த பயணம் சாதாரணமானதல்ல; அது விடாமுயற்சி மற்றும் துணிச்சலின் அடையாளம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |