சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதில் ஏற்பட்ட தாமதம் : ஜோ பைடன் மீது மஸ்க் குற்றச்சாட்டு
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk), முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) மீது குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் (Sunitha Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Barry Wilmore) ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 'ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.
சர்வதேச விண்வெளி
இது தொடர்பாக எலான் மஸ்க் தெரிவிக்கையில், விண்வெளி வீரர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்த ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்த ட்ரம்ப்புக்கு நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்னரே ஸ்பேஸ் எக்ஸ் மூலம் வீரர்களை அழைத்து வந்திரப்போம் எனவும் இதற்கான கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகத்திடம் வைத்த நிலையில் அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்