நல்லூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் கைது!
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலணி பகுதியில் இலங்கை மின்சார சபையில் கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டு ஜன்னலை உடைத்து உட்புகுந்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டில் இருந்த இரண்டரை பவுண் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபா பணமும் திருடியுள்ளார்.
இந்த சம்பவம் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான முறைப்பாட்டின் படி யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் நல்லூர்பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடமிருந்து திருடப்பட்ட இரண்டரை பவுண் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்