சுகாதார தொழிற்சங்க போராட்டத்திற்கு யாழில் ஆதரவு
Jaffna
Support
struggle
health union
By Vanan
இன்று முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்திய சாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
