அரச தலைவர் முறைமையை நீக்க ஆதரவு! நாட்டு மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: மகிந்த அறிவித்தல்
அரச தலைவர் முறைமையை நீக்க ஆதரவு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்கி நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் யோசனை 21வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது கட்சி உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
21வது திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியாக இருப்பதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,