செம்மணிப் போராட்டம் வலுப்பெற ஆதரவு: வெளியாகியுள்ள அறிவிப்பு
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் செம்மணிப் போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் இன்பம் அறிவித்துள்ளார்.
போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று(27) இடம்பெற்றது.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்," குறித்த போராட்டம் கிட்டு பூங்காவிலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்து செம்மணியில் பிரதான கூட்டத்துடன் நிறைவு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்பு.
மக்களுக்கு அழைப்பு
தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையீனங்கள் மற்றும் குளறுபடிகளால் தான் எந்தவொரு போராட்டமும் முழுமையான இலக்கை அடையாது இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
அதன்படி குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த தரப்பினருடன் பேசி ஒற்றுமையின் பலத்தை ஒரு நிலையில் கொண்டுசேர்க்க இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னரே எமது அமைப்பு ஆதரவை வழங்குகின்றது.
அந்த வகையில் நியாயமான போராட்டத்தை பொது அமைப்புகளும் மக்களும் இணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறேன்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

