திடீரென நாட்டைவிட்டு வெளியேறிய சத்திரசிகிச்சை நிபுணர் : செயலிழந்தது வைத்தியசாலை
தெஹியத்த கண்டிய ஆதார வைத்தியசாலையின் கடமையாற்றிய ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர் நாட்டைவிட்டு வெளியேறியதன் காரணமாக வைத்தியசாலையின் சகல நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்த நிலை குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் எழுத்து மூலம் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நோயாளிகள் மிகவும் அவல நிலையில் உள்ளதால் இதுவரை சுமார் 50 சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்கள் பொலனறுவை மற்றும் சுற்றுவட்டார வைத்தியசாலைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும், அந்த வைத்தியசாலைகளில் சனநெரிசல் காரணமாக நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
உடன் நடவடிக்கை எடுக்குமாறு
இந்த நிலைமையை தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவமனை பணிப்பாளர் சுகாதார அதிகாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |