புத்தாண்டு காலத்தில் பயணிக்கவிருக்கும் வாகனங்கள் தொடர்பாக வெளியான தகவல்!
புத்தாண்டு விடுமுறையின் போது அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஒன்றரை முதல் இரண்டு இலட்சம் வரையிலான வாகனங்கள் பயணிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி. சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்தினை வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிபர் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சராசரியாக ஒவ்வொரு நாளும் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 100,000 வாகனங்கள் பயணிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை
மேலும் கடந்த ஆண்டு நத்தார் பண்டிகை காலத்தில் மட்டும் 145,000 வாகனங்கள் இயக்கப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நெடுஞ்சாலைகள் ஊடாக கொழும்புக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சூரியபண்டார தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |