அரசாங்கத்தை மீண்டும் கடுமையாக விமர்சித்த இராஜாங்க அமைச்சர்
colombo
goverment
criticizes
sushil-premajayantha
By Sumithiran
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)இன்றையதினமும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போதைய எண்ணெய் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு,தொடர்பில் அவர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சபுகஸ்கந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல துறைகள் வீழ்ச்சியடையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை அணுக வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான செயலணி அமைக்கப்பட்டதற்கும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.