சிறைக் கைதியால் விசேட அதிரடிப்படை வீரர்களுக்கு நேர்ந்த கதி!
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ரவிந்து சங்க டி சில்வா எனப்படும் பூரு முனாவுக்கும், காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
காலி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்காக ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் முற்படுத்தப்படுவதற்காக இன்று (23) அவர் தனது அறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
இந்த நிலையில், சம்பவத்தில் சந்தேகநபர் மற்றும் இரண்டு காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா, மாத்தறை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முற்படுத்தபடுவதற்காக இன்று (23) பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
