அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Crime Branch Criminal Investigation Department
Crime
Gun Shooting
By Thulsi
காலி (galle) - அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்கொடை (Kosgoda) காவல்துறையினர் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டு கொலை
சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்