வெளிநாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய நபர்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
By Thulsi
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் - ஹுனுவில பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (01) காலை குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹுனுவில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
ஜயவர்தனபுர விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பன்னல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |