களுத்துறை மாணவி மரணம் - மொட்டுவின் தீவிர ஆதரவாளரான சந்தேகநபர்
Kalutara
Sajith Premadasa
Prasanna Ranatunga
Death
By Sumithiran
களுத்துறை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 16 வயதுடைய திஹாரா நிர்மானி என்ற பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மொட்டுவின் முன்னாள் ஆதரவாளர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சில காலத்திற்கு முன்னர் சிறி லங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்தவர் ஆனால் பின்னர் நீக்கப்பட்டவர். அதன்பின், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
சஜித் குற்றச்சாட்டு
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட அரசியல்வாதி ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டவர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி