தெற்கில் பாரிய கொலை சதித் திட்டம் :விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்!
மிதிகம பகுதியில் தொழிலதிபர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று (23.11.2025) வெலிகம காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளார்.
மிதிகம பகுதியில் தொழிலதிபர் உட்பட ஏழு பேரைக் கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தங்குமிட வசதியை வழங்கியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட சோதனை
தொழிலதிபர் உட்பட குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின்படி, மிதிகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அண்மையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சோதனையின் போது, T56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த இரு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்படி, நடத்தப்பட்ட விசாரணைகளின் கீழ் கொலை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர்களுக்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில், குறித்த வீட்டின் உரிமையாளர் வெலிகம - இப்பாவல பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் மிதிகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என்பதுடன், அவர் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |