மறைந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்சவின் இறுதிக்கிரியை இன்று நடைபெறவுள்ளது.
குளியாப்பிட்டியில் இன்று பிற்பகல் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
அவர் கடந்த 30 ஆம் திகதி தமது வீட்டுத் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அவரது கால் மற்றும் கையில் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இது தவறான முடிவெடுத்தமையா அல்லது கொலையா என்பது குறித்து காவல்துறை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பான நீதவான் விசாரணை நேற்று முன்தினம் (30) இடம்பெற்றதுடன், உடற்கூறு பரிசோதனை நேற்று (01) பிற்பகல் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
இவரது மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நால்வர் அடங்கிய குழு, இது அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த தற்கொலை என்பதை நேற்று (1) உறுதிப்படுத்தியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |