சுவ செரிய நோயாளர் காவு வண்டிகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
இந்தியா (India) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மானியமாக '1990 சுவ செரிய அறக்கட்டளை'க்காக 95 நோயாளர் காவு வண்டிகளைப் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1990 சுவ செரிய அறக்கட்டளைக்கு மேற்படி நோயாளர் காவு வண்டிகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, '1990 சுவ செரிய அறக்கட்டளை 297 நோயாளர் காவு வண்டிகளைக் கொண்டு தொடங்கப்பட்டது, இது 2016 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் இந்தியாவில் உள்ள டாடா சன்ஸ் (ATA Sons (Pvt) Ltd) தனியார் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது.
நோயாளர் காவு வண்டிகள்
தற்போது சிறிலங்கா (Sri Lanka) அரசால் வழங்கப்பட்ட 25 நோயாளர் காவு வண்டிகள் உட்பட 322 நோயாளர் காவு வண்டிகள் இயக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
சுவ செரிய அறக்கட்டளையின் இலக்கின்படி, 450 நோயாளர் காவு வண்டிகள் மற்றும் 25 பின்- நோயாளர் காவு வண்டிகள் தேவைப்படுவதாகவும், தற்போது 150 நோயாளர் காவு வண்டிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த டாடா சன்ஸ் தனியார் 50 நோயாளர் காவு வண்டிகளையும், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 45 நோயாளர் காவு வண்டிகளையும் மானியமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |