சுவிஸில் பயங்கரம் -தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஈழத்தமிழர்
சுவிஸ் ஆர்க்காவு மாநிலத்தில் ரூப்பர்ஸ் விலில் , ஈழத்தமிழர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த , 57 வயது நிரம்பிய ஈழத்தமிழர் ஒருவர் , தனது 47 வயது நிரம்பிய மனைவியை , இன்று புதன்கிழமை காலை , வேலை செய்யும் ஹோட்டலில் வைத்து கத்தியால் குத்தி , மனைவி அதிக இரத்தப்போக்கு காரணமாக , ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
புலம்பெயர் தேசத்தில் அதிகரித்த குடும்ப பிணக்கு
புலம்பெயர் தேசத்தில குடும்ப பிணக்குகளும் , கணவன் மனைவிமார்களுக்கான பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்படவேண்டும் . பிரச்சனைகளை அதிகளவில் மனதினுள் புதைத்து வைப்பதனால் , அவை கோபமாகவும் , மன அழுத்தமாகவும் மாறி , இறுதியில் வக்கிரம் நிறைந்த கொலைகளில் முடிவது மிகவும் கவலைக்குரியது .
ஈடு்செய்ய முடியாத கவலைக்குரிய விடயம்
வயது வந்த பிள்ளைகளைக் கொண்ட குறித்த தாயின் படுகொலை என்பது , மிகவும் ஈடு்செய்ய முடியாத கவலைக்குரிய விடயம். இனி கணவனுக்கான சட்டநடவடிக்கைகள் தண்டனை என்பனவும் , அவருடைய எதிர்காலத்தை கவலைக்குரியதாக்கும்.
எனவே கோபத்தினை விடுத்து , அன்போடு , புரித்துணர்வோடு பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதே ஆரோக்கியமானது .
வன்முறை ஒன்றுக்கும் தீர்வாகாது !
