ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி

Sri Lankan Tamils Tamils Sri Lanka Switzerland
By pavan Jan 10, 2024 01:05 PM GMT
Report

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுடன் சுவிஸ் அரசாங்கம் இணைந்து செயல்படுவதற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு இனவெறி தாக்குதல்களையும் தமிழின அழிப்புகளையும் இன்று வரை நடாத்தி வருகிறது.

இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள். இதுதொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு விரிவான முறையில் ஆராய்ந்து செயற்படாமல் சிறிலங்கா அரசுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறது.

அரசாங்கத்திற்கு எதிராக கேள்விகள்

இந்த நிலையில், இலங்கை அரசுடன் சுவிஸ் அரசாங்கம் இணைந்து செயல்படுவதற்கு எதிராக மோலினா ஃபேபியன் தலைமையிலான ஐந்து சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஏழு வெளிப்படையான கேள்விகளை கேட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில், சுவிஸ் அரசாங்கத்திற்கு எதிராக கேள்விகளை முன்வைத்த வைத்த ஐந்து சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உலகத் தமிழர் இயக்கம் வரவேற்றுள்ளது.

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி | Swiss Along Sri Lankan Against Eelam Tamils

இது தொடர்பாக உலகத் தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழீழத்தில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள், துன்புறுத்தல்கள், கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் உரிமையும் நீதியும் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன.

ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! வெளியாகிய புதிய அறிவித்தல்

ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! வெளியாகிய புதிய அறிவித்தல்

இனப்படுகொலை செய்த இலங்கை அரசு

இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள்.

இவைதொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு விரிவான முறையில் ஆராய்ந்து செயற்படாமல் சிறிலங்கா அரசுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறது.

இவ்வாறான சூழமைவில் டிசம்பர் 21, 2023 அன்று MOLINA FABIAN தலைமையிலான ஐந்து சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சுவிஸ் அரசாங்கத்திடம் ஏழு வெளிப்படையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி | Swiss Along Sri Lankan Against Eelam Tamils

எழுப்பப்பட்ட கேள்விகள்:

1. நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக விளங்கும் போர்க்குற்றங்கள் மீதான நீதிவிசாரணையையும் அதன் தொடர்ச்சியான அரசியல் தீர்வையும் நடைமுறைப்படுத்த சுவிஸ் அரசாங்கம் எவ்வாறு ஆதரவு வழங்குகின்றது?

2. நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டத் தவறிய சிறிலங்கா அரசினால் உருவாக்கப்பட்ட "உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை" பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்களும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் விமர்சித்திருக்கின்ற சூழலில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் எவ்வாறு ஆதரவளிக்கிறது?

3. புலம்பெயர் அமைப்பு மற்றும் பௌத்த பிக்குகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட "இமயமலைப் பிரகடனத்தை" பெரும் பகுதியான தமிழ் கட்சிகள், பாதிக்கப்பட்ட தரப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகள் போன்றவற்றால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து எந்தவகையில் ஆதரிக்கிறது?

இராணுவத்தினரிடம் சரணடைந்த முக்கிய போராளிகளுக்கு நடந்தது என்ன! சபையில் சிறீதரன் சீற்றம்

இராணுவத்தினரிடம் சரணடைந்த முக்கிய போராளிகளுக்கு நடந்தது என்ன! சபையில் சிறீதரன் சீற்றம்

தமிழர் இனப் பிரச்சனை தீர்வு

4. இது குறித்து சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் சமூகத்திடம் எந்தவொரு கருத்தாய்வும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?

5. சர்வதேச ரீதியில் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து அரசு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது?

6. இலங்கையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் சித்திரவதைக்கு உற்படுத்தப்படுவதுடன் கொலை செய்யப்படுவதாகவும் தற்போதும் அறிக்கைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந் நிலையில் சுவிசில் இருந்து இலங்கைக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் போது அவர்களின் பாதுகாப்பிற்கு சுவிட்சர்லாந்து எவ்வாறு உத்தரவாதம் அளிக்கிறது?

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி | Swiss Along Sri Lankan Against Eelam Tamils

7. 2023 இல் இலங்கைக்கு எத்தனை பேர் நாடுகடத்தப்பட்டார்கள்?

இந்த நிலையில், இவர்களின் இக்கேள்விகளுக்கான பதில்களை விரைவில் சுவிஸ் அரசு வெளியிடவுள்ளது.

இத்தருணத்தில் எம் இனம் சார்பில் கேள்விகள் எழுப்பிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குறித்த நாடாளுமன்ற உறுபினர்களுக்கு சுவிஸ் வாழ் தமிழர்கள் சார்பாகவும் உலகத் தமிழர்கள் சார்பாகவும் உலகத் தமிழர் இயக்கமாகிய நாங்கள் இம் முயற்சியை வரவேற்பதுடன் உளப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடையங்களிலும் நிலையான மற்றும் பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு உலகத் தமிழர் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களுடனான நேரடியான தொடர்பாடல்களைப் பேணுவதனூடாக தமிழர் இனப் பிரச்சனை தீர்வு தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள சுவிஸ் அரசை வலியுறுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம் என்பதையும் குறிப்பிடுகின்றோம். இவ்வாறு உலகத் தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024