பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இன்று (16.06.2023) வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
29 வயதுடைய இளைஞர் ஒருவர் மீதே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் தனது நண்பனை சந்திப்பதற்காக இளவாலை பகுதிக்கு வந்துகொண்டிருந்தவேளை உந்துருளியில் வந்த நால்வர் கொண்ட கும்பல் அவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதனையடுத்து குறித்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்