இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மை தொடர்பில் வெளியாகியுள்ள அறிகுறி!
உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பதானது, நாட்டில் நிதி ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பப்படுவதற்கான அறிகுறியாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஒக்டோபரில், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.
இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் 5994 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புத் தொகை, கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் 6467 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு கடன்
இந்த சூழ்நிலையின் அடிப்படையில் ரூபாயின் மதிப்பை நிலையானதாக வைத்திருக்க முடியும்.
நாட்டில் நிலவும் நிதி நிச்சயமற்ற தன்மை படிப்படியாக குறையும், தற்போது, நாட்டில் நிதி ஸ்திரத்தன்மை கட்டமைக்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டியிருக்கும், அத்தகைய கடன்களை செலுத்துவதற்கு நாட்டில் நிதி ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமானது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |