சினோபாம் தடுப்பூசி 2ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை! பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்
Arrest
Synopharm
Lunuwa
By Chanakyan
சினோபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்..
50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது வழங்கப்படும் அட்டையை தயாரிப்பதற்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 13 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி