ஜேர்மனியை நிலைகுலைய வைத்த கத்திக்குத்து தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள சிரிய இளைஞர்!
மேற்கு ஜேர்மனியில் (West Germany) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் 3 பேரை கொன்றதாக சிரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த கத்திக்குத்து சம்பவம் கடந்த 23 ஆம் திகதி மேற்கு ஜெர்மனியின் சோலிங்கனில் (Solingen) நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இடம்பெற்றது.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் பலியானதோடு, மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.
கத்திக்குத்து தாக்குதல்
மேலும் பலியானவர்கள், 56 மற்றும் 67 வயதான இரு ஆண்கள் மற்றும் 56 வயதுடைய ஒரு பெண் என தெரியவந்துள்ளது.
அத்துடன் காயமடைந்தவர்களில் நால்வர் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் இந்த தாக்குதல் ஜேர்மனியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை, அந்நாட்டு காவல்துறையினரும், தேசிய பயங்கரவாத தடுக்கும் பிரிவும் முன்னெடுத்து வருகின்றனர்.
ஒப்புதல் தாக்குதல்
இந்த நிலையில், இத்தாக்குதலை நடத்தியதாக 26 வயதான சிரியா நாட்டை சேர்ந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக ஜேர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்திற்குப் பிறகு, அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஜேர்மனிய பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் உட்பட முக்கிய தலைவர்கள், இந்த தாக்குதலை கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |