ரி20 போட்டி :சிம்பாப்வே அணி உலக சாதனை
சர்வதேச ஆண்களுக்கான ரி 20 போட்டியொன்றில் நேபாள(Nepal) அணி படைத்த உலக சாதனையை தகர்த்து சிம்பாப்வே(Zimbabwe) அணி புதிய சாதனையை தனதாக்கியுள்ளது.
இதன்படி மங்கோலியா(Mongolia) அணிக்கு எதிராக 03 விக்கெட்டுக்களை இழந்து நேபாளம் அணி 314 ஓட்டங்களை பெற்றதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.
ஓட்டங்களை குவித்த சிம்பாப்வே வீரர்
அதனை இன்று (23) கம்பியா (Gambia)அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 04 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களை குவித்து சிம்பாப்வே அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிக்கு ஆபிரிக்காவில் இருந்து தெரிவாகும் துணை பிராந்திய தகுதிகாண் போட்டித் தொடரிலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சிக்கஸர்களிலும் சாதனை
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி இந்த சாதனையை படைத்துள்ளது. அந்த அணியின் ஷிகந்தர் ராசா(Sikandar Raza) 43 பந்துகளில் 133 ஓட்டங்களை பெற்றார்.அதில் 15 சிக்கஸர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ராசா 33 பந்துகளில் சதத்தை எட்டினார். இது ஆடவர் ரி 20 போட்டிகளில் இணைந்த இரண்டாவது அதிவேக சதமாக அமைந்தது. எஸ்தோனியாவின் சாஹில் சவுகான்(Sahil Chauhan) 27 பந்துகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். நமீபியாவின் ஜான் நிகோல் லோஃப்டி-ஈட்டன்(Jan Nicol Loftie-Eaton) 2024 ஆம் ஆண்டில் 33 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
சிம்பாப்வே இன்றைய போட்டியில் 27 சிக்ஸர்களை அடித்துள்ளது. இது ஆண்கள் ரி20 போட்டியில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச சாதனையாகும். மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் அடித்த 26 சிக்கஸர்களே இதுவரை சாதனையாக இருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |