ரி 20 உலககிண்ண தொடர் : இந்திய அணியை சுருட்டியது தென்னாபிரிக்க அணி
Indian Cricket Team
South Africa National Cricket Team
T20 World Cup 2024
By Sumithiran
ரி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அகமதாபாதில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் இன்றைய (22)ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதலில் விளையாடியது.
76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இதன்படி தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்தது.

188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 111 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதன் மூலம், தென்னாபிரிக்க அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய டேவிட் மில்லருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி